இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவர் யார் ? அரசியல்வாதிகளின் அதரவு எவருக்கு ?



இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஏவுகணை தொழிற்நுட்ப வல்லுநருமான ஏ.பி.ஜே அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத்தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன.இப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவராக யாரை முன்னிறுத்தலாம் என்



று ஆளும்  காங்கிரஸ் தலைமை தீவிரமா
கப் பரிசீலித்துவந்தது. இப்பெயர் பட்டியலில், பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, இராணுவத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், உ பியின் சமாஜ்வாதி, மே. வங்க திரிணாமூல், தமிழகத்தின் அ தி மு க ஆகிய கட்சிகள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக ஏற்க தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத் பவாரும், அரசியலுக்கு அப்பாற்பட்டவரே குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறி வந்தார். மேலும், காங்கிரஸின் சுஷில் குமார் ஷிண்டே யும் அப்துல் கலாம் இரண்டாம் களநிலை காண தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனால், அப்துல்கலாமே மீண்டும் குடியரசுத் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்