கூனிமேடு வளர்ச்சிக்கு இளைய சமுதாயம் ஒன்றுப்பட்டு பாடு படவேண்டும் கூனிமேடு குரல் இணையதளம் கருத்து .



கடந்த சிலவருடங்களுக்குமுன்பு வெளிநாட்டின் மீது மோகம் கொண்டு .அதற்காக படிப்பை தவற விட்டு வெளிநாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற படிப்பறிவற்ற சகோதரர்கள் வெளிநாடு மோகத்தை கலைத்து இனி  வரும் காலங்களில் இதுப்போன்ற அவல  நிலையை மாற்றி இனி வரும் சமுதாயம் சிறந்த அறிஞர் சமுதாயம் உருவாக்க வேண்டும் .

அதனால் இனிமேல் உருவாகும் பிள்ளைகளை வெளிநாட்டு கனவை தகர்த்து இதுப்போன்ற செயல்களில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தாமல் பாட புத்தகத்தில் கவனம் செலுத்த போதிய வாழ்வாதாரத்தை அவர்களுக்கு தேடித்தருவது நமது கடமையாகும் .இதனால் நம்முடைய சமுதாயம் வளர்சிக்கண்டு சிறந்த கல்வியாளர்கள் ,சாதனையாளர்களை உருவாக்க பெருதுவக்க பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த முன் வரவேண்டும் .

மேலும் தற்போது தலைவிரித்திருக்கும் வட்டி ,வரதட்சனைப் போன்ற இழிவான செயல்களில் ஈடுபடாதவாறு காக்க இன்றைய  இளைஞகள்   களத்தில் இறங்கி முழுமையாக போராட வேண்டும் . 

அண்மைகாலமாக குடி, சூதுவுக்கு,அடிமையாகிருக்கும் சமுதாயத்தை உணர்த்தி திருத்த முன் வரவேண்டும் . பகைமையை மறந்து ஒற்றுமை மலர  நட்பால் மட்டுமே முடியும் என்பதால் ஒற்றுமை என்ற இணைப்பு கயிறைப்பிடித்து  முன்னேற்றிட பாடு பட வேண்டும் ."இயலாமை என்பது முடியாது நினைப்போருக்காகும்" !"முடியும் நினைப்போருக்கு அது வலிமையாகும் ".

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்