மூட நம்பிக்கைகள்


1.ஆயிசு நூறு

2.காக்கை கத்தினால் தபால் வரும்

3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்

4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

5.சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

6.வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.

7.குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது

8.வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது

9.பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்

10.விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்

11.திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது

12.ஆரத்தி எடுப்பது

13.தாய் தந்தைய திருமணத்தில் ர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது

14.தாயத்து, தாவீஸ் அணிவது

15.தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது

16.வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி     
                      பொம்மைகளை மாட்டுவது


17.பூசணிக்காயைத் தொங்க விடுவது
18.பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது

19.வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களை
                         தொங்க விடுவது


20.மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக்  கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது

21.கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்

22.தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்

23.உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை

24.தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணிபோன்றவற்றைக்               
             கோர்த்து தாலி கட்டுதல்   

25. திருமணத்தில் மாலை மாட்டுதல்

26. மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்
27. மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள்,
          வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்

இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவைஅனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.Sharfudeen



நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்


திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல் குர்ஆன் 30:21)

இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.

வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.

வரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு

திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள், வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)

நிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்

நிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

சனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (4826)

மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்? நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா? அல்லது கெட்டதாக அமையுமா? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் (9171)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா  நூல்: முஸ்லிம் (4137)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (5757)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்: அபூதாவூத் (3411)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்  அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)    நூல்: அஹ்மத் (6748)

மார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

பந்தலிலும் ஓர் பாவ காரியம்

பிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.   (அல்குர்ஆன் 42:49,50)

இப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

மாலையில் மறைந்துள்ள மர்மம்

மணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும் மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.

அதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.

நிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக
(அல்குர்ஆன் 9:51)

இந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.

தாலி கட்டுதல்

தாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே!

இந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.

நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி) நூல்: அஹ்மத் (16781)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி) நூல்: அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் (19149)

எனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரத்தி எடுத்தல்

பிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.

ஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.

நிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது. ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:63,64)

தாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்
சில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 41:37)

இவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

மூட நம்பிக்கைகள்

ஆயிசு நூறு

 காக்கை கத்தினால் தபால் வரும்

 மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்

 கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

 சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

 வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.

 குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது

 வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது

 பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்

 விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்

 திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது

ஆரத்தி எடுப்பது

தாய் தந்தைய திருமணத்தில் ர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது

 தாயத்து, தாவீஸ் அணிவது

 தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது

 வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை மாட்டுவது

 பூசணிக்காயைத் தொங்க விடுவது

 பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது

வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது

மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது

கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்

 தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்

உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை

 தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்

 திருமணத்தில் மாலை மாட்டுதல்

 மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்

 மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள்,
வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்

இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.


அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.Sharfudeen




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம்

அல்லாஹ்வின் திருபெயாரால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம் நடத்தும்

தியாகத்திருநாள் திடல்தொழுகை

அன்புள்ள இஸ்லாமிய சகோதர.சகோதரிகளா.

அஸ்ஸலாமுஅலைக்கு

இன்ஷாஅல்லாஹா 26/10/2012வெள்ளிக்கிழமை காலை6:30மணிக்கு
 
இடம்: ஹவல்லி அமெரிக்கன்கிரியேடிவ்அகாடமிஸ்கூல்


தியாகத்திருநாள் திடல்தொழுகை நடைபொறும்.
சகோ: M.I. சுலைமான்,TNTJ தலைவர் (பொறுப்பு)

மீனா அப்துல்லாஹ் கல்ஃப் ஸ்பிக் கேம்ப் பெறுநாள்

 உரை : சகோ: மசூத் உஸ்மானி



மாபொரும் மார்க்க விளக்க சொற்பொழிஉ


இன்ஷா அல்லாஹ்

நாள்:26/10/2012 வள்ளி இஷஉக்குப் பின்

இடம்: லுலுவா மஸ்ஜித்,பயான்,கத்தா:11 ரோடு:206

மிஸ்ரஃப் ஜமியா மற்றும் பர்கர்கிங் எதிரில்

தலைப்பு

சத்திய சோதனை

உரை

சகோ: M.I.சுலைமான் TNTJ தலைவர் (பொறுப்பு)

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகன வசதிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) குவைத் மண்டலம்

CELL: 99265628,99363072,65678922,9736718,97129717

ஜும்ஆவும் பெருநாளும்

ஜும்ஆ தினத்தில் பெருநாள் வருமானால் நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுது விட்டு ஜும்ஆத் தொழுகையை விட்டுவிடலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற அத்தியாயத்தையும், ஹல் அதாக ஹதீஸுல் காஷியா என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்து விட்டால் இரு தொழுகைகலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

இந்த ஹதீஸில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: அபூ தாவூத் 907

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கி உள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

மேற்கண்ட ஹதீஸில் பகிய்யா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவரை சில அறிஞர்கள் குறை கூறி உள்ள காரணத்தினால் இந்த ஹதீஸை சில அறிஞர்கள் நிராகரிக்கின்றனர். இதன் அடிப்படையில் செயல்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். பகிய்யா என்பவர் அறிஞர்களால் குறை கூறப்பட்டது உண்மை என்றாலும் அவரது நம்பகத்தன்மை குறித்தோ, நினைவாற்றல் குறித்தோ யாரும் குறை கூறவில்லை. மாறாக, அவர் நம்பகமானவர்கள் கூறுவதையும், நம்பகமற்றவர்கள் கூறுவதையும் அறிவித்து இருக்கிறார் என்பது தான் அவர் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டு!

இது போன்ற தன்மையில் இருக்கின்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலை வல்லுநர்கன் முடிவாகும். பகிய்யா என்ற இந்த அறிவிப்பாளர் குறித்து அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது, இவர் அறிமுகமற்றவர்கள் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

அறிமுகமானவர்கள் வழியாக இவர் அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவரது கருத்தையே யஹ்யா பின் முயீன், அபூ சுர்ஆ, நஸயீ, யஃகூப், அஜலீ ஆகியோர் வழி மொழிகின்றனர். இவர் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸ் முஸ்மிலும் இடம் பெற்று இருக்கிறது.


இன்ஷா அல்லாஹ்


இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்


நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

பெருநாள் தொழுகையின் அவசியம்:


பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

தொழுகைநேரம்:

இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது.

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 581

இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது.

தமிழகத்தில் அனேக இடங்கல் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும்.

பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும்.

தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும் போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)நூல்: புகாரி 534, 537, 538, 539

பள்ளிவாசல் சென்று தொழ வேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள். எனவே நபிவழியைப் பின் பற்றித் தொழுவது என்றால் மைதானத்தில் தான் இத்தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். மைதானத்தில் மக்கள் வெயிலைத் தாங்க முடியாத நேரத்தில் தொழுவது மேற்கண்ட நபிவழிக்கு முரணாக அமைகிறது.

மேலும் பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் சூரியன் முழுமையாக வெப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழுது விடுவது தான் சரியான செயலாகும்.

பெருநாள் தொழுகையில் பெண்கள்:

பொதுவாகப் பெண்கள் பள்வாசலுக்கு வருவதை அனுமதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்யில் தான் தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை. அதை வலியுறுத்தவும் இல்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 324, 351, 974, 980, 981, 1652

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 971

பெருநாளுக்கென ஒரு பரக்கத் இருக்கின்றது. அந்த நாள் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் (மாதவிடாய்ப் பெண்களும்) தக்பீர் சொல்ல வேண்டும். ஆண்கள் துஆச் செய்யும் போது பெண்களும் தங்களுக்காக துஆச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

கற்பனைக் காரணங்களைக் கூறி பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைக் தடுப்பவர்கள், பரக்கத்தான அந்த நாள் பெண்கள் செய்ய வேண்டிய வணக்கங்களுக்குத் தடையாக அமைந்து விடுகின்றார்கள். பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்கு, சுன்னத்தான திடல் தொழுவதை விட்டுவிட்டு பள்வாசலைத் தேர்ந்தெடுத்ததும் மிக முக்கியமான காரணம் திடல் தொழுகை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்வாசல் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்யில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரணப் பள்கல் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்யில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.


இன்னும் சில ஊர்கல் பெண்களுக்கென தனியாக பெருநாள் தொழுகை நடத்துகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாத்தாக பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.

தொழுகையும் குத்பாவும்:

பெருநாள் தொழுகை ஜும்ஆ தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுகையும், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின் போது முதல் இமாம் உரை நிகழ்த்தி விட்டுப் பின்னர் தொழுகை நடத்த வேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதல் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 962

பாங்கு இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாலும், ஹஜ் பெருநாலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி)  நூல்: புகாரி 960

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். எனவே பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ இல்லை.

பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாலும், ஹஜ்ஜுப் பெருநாலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்)  தொழுகையைத் தான் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 964, 989, 1431, 5881, 5883

சில ஊர்கல் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

தொழுகை முறை:

பெருநாள் தொழுகை மற்ற தொழுகைகளைப் போன்றது தான். ஆயினும் இதற்கென சில கூடுதல் அம்சங்கள் உள்ளன. எனவே, இந்தக் கூடுதல் அம்சங்கள் எவை என்பதை மட்டும் நாம் பார்ப்போம். மற்றபடி உளூச் செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்ற தொழுகைக்கு உள்ள அனைத்துக் காரியங்களும் பெருநாள் தொழுகைக்கும் செய்யப்பட வேண்டும்.

பெருநாள் தொழுகைக்காக நின்றவுடன் இமாம், பெருநாள் தொழுகைக்கான நிய்யத் சொல்க் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. நிய்யத் என்பதன் பொருள் மனதால் எண்ணுவதாகும். வாயால் மொழிவதல்ல! எந்த வணக்கத்தில் ஈடுபட்டாலும் வணக்கத்தில் ஈடுபடும் எண்ணம் இருப்பது அவசியமாகும். வாயால் சொல்வது நபிவழியல்ல! இதை முன்பே நாம் விளக்கியுள்ளோம்.

கூடுதல் தக்பீர்கள்:

சாதாரண தொழுகைளிகல் சொல்லப்படும் வழக்கமான தக்பீர்களை விட பெருநாள் தொழுகையில் கூடுதலான தக்பீர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களுமாக மொத்தம் 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதி 492 அபூதாவூத்

இந்த ஹதீஸில் 7+5 தக்பீர்களை கிராஅத்திற்கு முன்பு சொல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது.

சாதாரண தொழுகைகளில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையிலும் உண்டு என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு ஓத வேண்டிய அல்லாஹும்ம பாஇத் பைனீ...... அல்லது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ..... போன்ற துஆக்கள் ஏதேனும் ஒன்றை ஓதிக் கொள்ள வேண்டும். பிறகு 7 தக்பீர்கள் கூற வேண்டும். பிறகு கிராஅத் ஓத வேண்டும்.

தக்பீர்களுக்கு இடையில்....

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை. ஆனால் இன்று நடைமுறையில் தக்பீர் சொல்லும் போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பது தான்.

தஹ்லீல் என்றால் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல் தஸ்பீஹ் என்றால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல் தஹ்மீத் என்றால் அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல் எனப் பொருள்.

இதே போல் தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று சொல்வது தான் இதன் பொருளாகும்.

தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால் 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்க மாட்டோம். இது போன்று தான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக் கூடாது. 7+5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்பது தான் இதன் பொருள். இந்தக் கூடுதல் தக்பீர்களுக்கு இடையில் ஏதேனும் திக்ருகள் சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள். சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ரை தக்பீர்களுக்கிடையில் கூறும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகின்றது. இதற்கும் நபி வழியில் ஆதாரம் இல்லை.

இந்த தக்பீர்களுக்கு இடையில் ஓத வேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ ஆதாரம் ஏதுமில்லை.

ஓத வேண்டிய அத்தியாயங்கள்:

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓத வேண்டிய சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (அத்தியாயம்: 87) ஹல் அதாக ஹதீசுல் காஷியா (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

அபூ வாகித் அல்லைஸி (ரலி)யிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கேட்ட போது, அவ்விரு தொழுகைகலும் காஃப் வல் குர்ஆனில்மஜீத் (அத்தியாயம்: 50) இக்தர பதிஸ் ஸாஅ (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலத்தார்கள்.
நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓத வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய சூறாக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதும் தெவாகின்றது.

இவ்வாறாக மற்ற தொழுகைகளைப் போன்ற ருகூவு, சுஜுதுடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.

பெருநாள் (குத்பா) உரை:

பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் இரு பெருநாட்கலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 962
இந்த ஹதீஸ்கன் அடிப்படையில் முதல் தொழ வேண்டும். அதன் பிறகு தான் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான ஊர்களில் தொழுவதற்கு முன்பாக ஓர் அரை மணி நேர உரை முதல் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும்.

மிம்பர் (மேடை) இல்லை:

வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்யில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். அது போல் பெருநாள் தொழுகைக்குப் பிறகு மிம்பரில் நின்று உரையாற்ற வேண்டுமா? அல்லது தரையில் நின்று உரையாற்ற வேண்டுமா? என்று இப்போது பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: இப்னு குஸைமா.

இந்த ஹதீஸ் அடிப்படையில் இமாம் தரையில் நின்று தான் உரையாற்ற
வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உரையை) முடித்து இறங்கி பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 978

இந்த ஹதீஸில் நஸல (இறங்கி.......) என்று வருகின்றதே! மிம்பர் இருந்ததால் தானே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள் என்று நபித்தோழர் அறிவிக்கிறார் என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது. நஸல என்ற வார்த்தைக்கு நாம் கொள்கின்ற சரியான பொருன் மூலம் நம்முடைய சந்தேகம் நீங்கி விடுகின்றது.

நஸல என்ற வார்த்தை (1) உயரமான இடத்திருந்து இறங்குதல் (2) தங்குதல் (3) இடம் பெயர்தல் என்று மூன்று பொருட்கல் பயன்படுத்தப்படுகின்றது.ஜாபிர் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் நஸல என்ற வார்த்தைக்கு முந்திய இரண்டு பொருட்கள் கொடுக்க முடியாது. மூன்றாவது பொருளை அதாவது இடம் பெயர்தல் என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும். காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றினார்கள் என்று மேற்கண்ட இப்னு குஸைமா ஹதீஸ் தெவாகக் கூறுகின்றது எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அங்கிருந்து நகர்ந்து பெண்கள் பகுதிக்கு வந்தார்கள் என்று அந்த ஹதீஸுக்கு விளக்கம் அத்தால் நமக்கு ஏற்படும் அந்தச் சந்தேகம் நீங்கி விடுகின்றது.

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 98

இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டி விடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்:

ஜும்ஆ உரைக்கும், பெருநாள் உரைக்கும் ஹதீஸில் காட்டப்பட்டுள்ள வித்தியாசத்தைத் தவிர்த்து மீதி எல்லா அம்சங்கலும் பெருநாள் உரை, ஜும்ஆ உரையைப் போன்று தான்.

ஜும்ஆ உரையைக் காது தாழ்த்திக் கேட்பதற்கு என்ன என்ன காரணங்கள் பொருந்துமோ அதே காரணங்கள் பெருநாள் உரைக்கும் பொருந்துகின்றன. எனவே, நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அது போல் நாமும் அமைதியாக இமாமின் உரையைக் கேட்க வேண்டும்.

விரும்பினால் உரையைக் கேட்கலாம்; இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும்.

கன்னிப்பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து முஸ்லிம்கன் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது பெருநாள் உரையை கேட்பதற்காகத் தானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல!

பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் அந்தக் கட்டளையைக் கேக் கூத்தாக்குகின்றோம் என்பது தான் பொருளாகும்.

பெருநாள் பிரார்த்தனை:

பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்கன் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்கன் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நான் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 971
இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஓர் உரையா? இரண்டு உரையா?

இரு பெருநாட்கலும் நிகழ்த்தப்படக் கூடிய உரையின் போது இடையில் உட்கார்வதற்கு நபி வழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்ல! எனவே இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாலோ அல்லது ஹஜ் பெருநாலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: இப்னுமாஜா

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா என்ற அபூபஹ்ர் என்பவரும் இஸ்மாயீல் பின் அல் கவ்லானி என்பவரும் பலவீனமானவராவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவைப் போன்று இரண்டு உரைகள் ஆற்றியதற்கு ஆதாரமில்லை. தரையில் நின்று அவர்கள் உரையாற்றியதால் இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெருநாள் தக்பீர் கூறுதல்:

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்கன் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்கன் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நான் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 971

இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. தக்பீர் என்பது அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து ல்லாஹி கஸீரா... என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் உள்ளது. இவ்வாறு பெருநாட்கல் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவையாகவே உள்ளன.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீர் சல்மான் பார்ஸி (ரலி) கூறியதாக ஆதாரப்பூர்வமான அறிவிப்பு உள்ளது. ஆயினும் இது சல்மான் (ரலி)யின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இது மார்க்கமாக முடியாது.

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்:

பெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 986

இந்த ஹதீஸ் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவது நபி வழியாகும்.

பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். நூல்: புகாரி 989

இந்த ஹதீஸின் படி பெருநாள் தொழுகையின் முன்போ, பின்போ எந்தத் தொழுகையும் கிடையாது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?

நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிருந்து) முதல் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்கலும் நாம் காணமுடிகின்றது.

ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதை புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகல் எனது ஆடே முதன் முதல் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்கடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையத்தார்கள்.அறிவிப்பவர்: பராஃ (ரலி) நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுதுவிட்டு வந்து ஹஜ் பெருநாள் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுது விட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கின்றார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

ஜும்ஆவும் பெருநாளும்:

ஜும்ஆ தினத்தில் பெருநாள் வருமானால் நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுது விட்டு ஜும்ஆத் தொழுகையை விட்டுவிடலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற அத்தியாயத்தையும், ஹல் அதாக ஹதீஸுல் காஷியா என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்து விட்டால் இரு தொழுகைகலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

இந்த ஹதீஸில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: அபூ தாவூத் 907

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கி உள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

மேற்கண்ட ஹதீஸில் பகிய்யா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவரை சில அறிஞர்கள் குறை கூறி உள்ள காரணத்தினால் இந்த ஹதீஸை சில அறிஞர்கள் நிராகரிக்கின்றனர். இதன் அடிப்படையில் செயல்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். பகிய்யா என்பவர் அறிஞர்களால் குறை கூறப்பட்டது உண்மை என்றாலும் அவரது நம்பகத்தன்மை குறித்தோ, நினைவாற்றல் குறித்தோ யாரும் குறை கூறவில்லை. மாறாக, அவர் நம்பகமானவர்கள் கூறுவதையும், நம்பகமற்றவர்கள் கூறுவதையும் அறிவித்து இருக்கிறார் என்பது தான் அவர் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டு!

இது போன்ற தன்மையில் இருக்கின்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலை வல்லுநர்கன் முடிவாகும். பகிய்யா என்ற இந்த அறிவிப்பாளர் குறித்து அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது, இவர் அறிமுகமற்றவர்கள் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

அறிமுகமானவர்கள் வழியாக இவர் அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவரது கருத்தையே யஹ்யா பின் முயீன், அபூ சுர்ஆ, நஸயீ, யஃகூப், அஜலீ ஆகியோர் வழி மொழிகின்றனர். இவர் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸ் முஸ்மிலும் இடம் பெற்று இருக்கிறது.

பெருநாள் கொண்டாட்டங்கள்

புத்தாடை அணிதல்:

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாலும், தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது (மறுமைப்) பேறு அற்றவர்கன் ஆடையாகும் எனக் கூறினார்கள்.  நூல்: புகாரி 948, 3054

பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. அதே சமயம் ஒவ்வொரு பெருநாளைக்கும் புது ஆடை எடுக்க வேண்டியதில்லை என்பதை உமர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் கருத்திருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாலும் தூதுக்குழுவைச் சந்திக்கும் போதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) கூறும் கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புத்தாடை வாங்கியிருந்தால் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு பெருநாலும் புது ஆடை வாங்கி அணிந்தால் தான் பெருநாள்; இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை பலமாக மக்கடத்தில் பதிந்து விட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி துணிமணிகள் வாங்கி விட்டு, கடைசியில் அந்தக் கடனை அடைக்க முடியாமல் காலமெல்லாம் கஷ்டப்படும் அவல நிலையைப் பார்க்கின்றோம். இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது. கடன் பட்டு அவஸ்தைக்கு நாம் உள்ளாக வேண்டிய அவசியமில்லை.

பெருநாளும், பொழுது போக்கு அம்சங்களும்:

புஆஸ் (எனும் பழமையான போர்) பற்றி அன்ஸாரிகள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என் முன்னே பாடிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் போதாகும். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது பெருநாளாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 952, 3931

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் முன்னிலையில் ஷைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன; இது நமது பெருநாளாகும் என்று கூறியதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கன் முன்னிலையில் இசை வாத்தியக் கருவிகள் இருந்தன; அதனால் பெருநாள் அன்று இன்னிசைக் கச்சேரி பாடல்கள் கூடும் என்ற அளவுக்குச் சிலர் சென்று விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அந்த சிறுமியர் வாத்தியக் கருவிகள் எதையும் வைத்துக் கொண்டு பாடவில்லை. அவர்கள் தஃப் என்ற கொட்டடித்திருக்கின்றார்கள். இதை நஸயீயில் உள்ள ஹதீஸ் விளக்குகின்றது. அபூபக்ர் (ரலி) ஆயிஷா (ரலி) யிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் தஃப் அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியர்களை (பாடுதற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: உத்வா நூல்: நஸயீ 1575

இந்த ஹதீஸில் தஃப் (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர் (ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்ற விபரம் நமக்குத் தெரிய வருகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுது போக்கு அம்சங்களைச் செயல் படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டு கச்சேரி, போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

வீர விளையாட்டுக்கள்:

வீர சாகச விளையாட்டுகள் விளையாடுவதையும் பெருநாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநான் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்கன் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சத்த போது உனக்குப் போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 950, 2907

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க
வழிபாடுகளை அமைத்துக் கொள்ள இறைவன் அருள் புரிவானாக!


இன்ஷா அல்லாஹ்


இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்











மரண அறிவிப்பு


இன்ன லில்லாஹி வா இன்னயிலிஹி ராஜிஹூன்

INNA LILLAHI VAA INNA ILAIHI RAAJIHOON

21/10/2012
கூனிமேடு திடிர் நகரில் வசித்து வந்த
சகோதரி காதூன்பி அப்துல் கரீம் மனைவி இன்று மரணம் அடைந்தார்

என்ற தகவலை தெரிவிக்கிறோம்...... .

  ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்' என்பது இதன் பொருள்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். திருக்குர்ஆன் 2.155, 156, 157

மேற்கண்ட சொற்களை மரணத்தின் போது மட்டுமின்றி நமக்கு ஏற்படும் எத்தகைய துன்பத்தின் போதும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவரின் இழப்பு நம்மைப் பாதிக்கும் என்றால் 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' என்பதுடன் மற்றொரு பிரார்த்தனையையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' எனக் கூறிவிட்டு 'அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா' (இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் என் கணவர் அபூ ஸலமா இறந்த போது 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தவரான அபூ ஸலமாவை விட சிறந்த முஸ்லிம் வேறு யார் இருப்பார்?' என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். என் கணவருக்குப் பகரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குத் தந்தான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)நூல்: முஸ்லிம் 1525, 1526,

இறந்தவரின் வீட்டுக்கு அல்லது நோயாளியைச் சந்திக்கச் செல்பவர்

நல்லதையே கூற வேண்டும். ஒரு நோயாளியை நாம் சந்திக்கச் சென்றால் அவர் பிழைப்பது அரிது என்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்லதைத் தான் கூற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவான் என்பன போன்ற சொற்களைத் தான் கூற வேண்டும்.

இது போல் தான் மரணித்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அவரது உறவினர்களிடம் நல்லதையே கூற வேண்டும்.

நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 1527

மரணச் செய்தியைக் கேட்டவுடன் பாவமன்னிப்புத் தேடல்

மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் 'அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!' என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது 'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1328

ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது 'அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' எனக் கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 21509

இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்


இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.

அவர்களுக்குப் பின் வந்தோர் 'எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்' என்று கூறுகின்றனர். திருக்குர்ஆன் 59:10

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது
இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.

இன்ஷா அல்லாஹ்


ஜனாஸாவின் சட்டங்கள்

தொடறும்...

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்






மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு

நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று 65ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை.

மகராஷ்ட்ரா மாநிலம் கைர்லாஞ்சியில் நான்கு தலித்துகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கின்றது. இந்த நாட்டில் தலித் மக்களுக்கு இன்னும் தீண்டாமையிலிருந்து விடுதலையோ, விமோசனமோ கிடைக்கவில்லை என்பதை இது உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்திற்குக் கர்நாடகத்துடன் காவிரிப் பிரச்சனை, கேரளத்துடன் முல்லைப் பெரியாறு பிரச்சனை என்று நாட்டுக்கு நாடு நடக்கும் எல்லைப் பிரச்சனை போன்று ஒன்றுபட்ட இந்தியாவுக்குள்ளேயே மாநிலத்திற்கு மாநிலம் நடைபெறும் ஆற்றுத் தகராறுகள்.

இந்தியா பாகிஸ்தான், சீனா எல்லைப் பிரச்சனைகள், இலங்கை இனப் பிரச்சனை, இராக் ஆக்கிரமிப்பு, ஈரான் மீது பொருளாதாரத் தடை இது போன்ற பிரச்சனைகள் உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் மக்காவில் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.

அது ஒரு மனித நேய மாநாடு! மொழி வெறி ஒழிப்பு மாநாடு! நிற பேத ஒழிப்பு மாநாடு! தேச வெறி ஒழிப்பு மாநாடு! நேச வளர்ப்பு மாநாடு! சகோதரத்துவ, சமத்துவ மாநாடு! தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று நாம் அத்தனை பெயர்களையும் கொண்டு அதை அழைக்கலாம்.

நிகழ்ச்சி நிரல்கள்

வழக்கமாக மனிதர்கள் நடத்தும் மாநாட்டில் பேச்சாளர்கள், பார்வையாளர்கள் என்ற இரண்டு அவைகள் இருக்கும். பேச்சாளர்கள் மேடையிலும், பார்வையாளர்கள் தரையிலுள்ள இருக்கைகளிலும் இருப்பார்கள். பேச்சாளர்கள் தங்கள் தலைவர்களை வானளவுக்குப் புகழ்ந்து தள்ளி தனி நபர் வழிபாட்டை ஆரவாரமான கைத்தட்டல்களுக்கு மத்தியில் அரங்கேற்றிக் கொண்டிருப்பர்.

இந்த மாநாடு அப்படியல்ல! இந்த மாநாட்டில் இரண்டு அவைகள் கிடையாது. ஓரவை தான். அந்தப் பேரவையின் பெருந்தலைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனை நோக்கி, "நீ தனித்தவன், உனக்கு இணையில்லை, துணையில்லை' என்று அவன் மட்டுமே புகழாரம் சூட்டப்படுகின்றான்.

இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் மினாவுக்குச் செல்லுதல், அரஃபாவுக்குச் செல்லுதல், மினாவில் தங்குதல், கஅபாவை வலம் வருதல் ஆகியவை அடங்கியிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளில் அரஃபாவில் தங்குவது தான் உச்சக்கட்டமாகும்.

அரபா திடலா? அரபிக் கடலா?

உலகிலுள்ள அனைத்துக் கண்டத்தைச் சேர்ந்த மக்களும், குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், பன்மொழி பேசுகின்ற பல்வேறு கலாச்சார, பண்பாட்டு மக்களும் ஒரே விதமான வெள்ளை ஆடையில் அந்த அரஃபா திடலில் சங்கமிக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மனிதத் துளிகள் ஒரே வெண்ணிற ஆடையில் சங்கமிக்கும் அரபியக் கடலாக, ஜன சமுத்திரமாக அரபா திடல் ஆகி விடுகின்றது.

ஹஜ் அல்லாத காலத்தில் ஒருவர் மக்காவுக்குச் சென்றால் அங்கு ஓர் உண்மையைக் கண்கூடாகக் காணலாம். அந்த அரபா, முஸ்தலிபா, மினா போன்ற திடல்களை சாதாரண காலங்களில் மனித சஞ்சாரமில்லாத பகுதிகளாகக் காண்பர்.

அது ஒரு விளைச்சல் தரும் வளமிக்க வேளாண் நிலமல்ல! வணிகர்கள் வந்து செல்லும் வணிகத் தலமும் அல்ல! உல்லாசப் பயணிகள் உலா வருகின்ற இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், ஆறுகள், அழகுப் பாங்கான ஏரிகள், இதயங்களை ஈர்க்கின்ற மலைகள் நிறைந்த சுற்றுலாத் தலமும் அல்ல! பீறிட்டு வரும் நீரூற்றுக்கள் நிறைந்த நீர் நிலைகளுமல்ல!

இப்படியொரு பாலைவனத்தில் மனிதர்களைக் கொண்டு வந்து நிறுத்துவதில் உள்ள அர்த்தமென்ன?

மக்களே! இங்கு வெள்ளை ஆடை உடுத்தி நிற்கும் நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களில் அரசன் ஆண்டி, வெள்ளையர் கருப்பர், ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் நீங்கள் அத்தனை பேரும் என்னுடைய அடிமைகள் தான்.

உங்களில் உள்ள குடும்பம், கோத்திரம், கிளைகள் எல்லாமே உங்களை ஒருவர் மற்றவரிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்காகத் தானே தவிர குலப்பெருமை பாராட்டி, கைர்லாஞ்சியில் நான்கு பேர் கொல்லப்பட்டது போன்று அடித்துக் கொள்வதற்காக அல்ல!

நீங்கள் எல்லோரும் சகோதரர்கள். என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு கூடிய உங்களிடம் உங்கள் நிறம் குறுக்கே நிற்கவில்லை; உங்கள் நாடு, தேசம், எல்லைகள் குறுக்கே நிற்கவில்லை; உங்களுடைய இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எதுவும் குறுக்கே நிற்கவில்லை.

எல்லை, தேசம், இனம், மொழி இவை அனைத்தும் இந்த அரபா திடலில் என் முன்னால் நிற்கும் போது தகர்ந்து நொறுங்கி விட்டன. இந்த நிலை தான் நீங்கள் உங்கள் தாயகங்களுக்குத் திரும்பும் போதும் தொடர்கின்றது; தொடர வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பாவே! இராக்கை ஆக்கிரமிக்காதே! ஈரானை அழிக்க நினைக்காதே! அவர்கள் யார்? உங்களுடைய தந்தையான ஆதமின் மக்கள் தானே!

சிங்களர்களே! இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்காதீர்கள். தமிழர்களே! சிங்களர்களை அழிக்க நினைக்காதீர்கள். அவர்களும் நீங்களும் ஆதமுக்குப் பிறந்தவர்கள் தான்; சகோதரர்கள் தான்.

கர்நாடகாவே! தமிழகத்திற்குக் காவிரியைத் திறந்து விட மறுக்காதே! அவர்களும் உங்கள் சகோதரர்கள் தானே! என்று அரபா திடலில் நிற்கும் உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்களிடமும் இறைவன் ஓர் ஒற்றுமை உணர்வை, சகோதரத்துவ உணர்வை, பந்தத்தை, பாசத்தை உருவாக்கி, தீண்டாமையை மக்களின் உள்ளங்களிலிருந்து கழற்றி, களைந்து விடுகின்றான்.

ஆண்டுக்கு ஒருமுறை அவன் கூட்டுகின்ற இந்த மாநாட்டில் இப்படி ஒரு தீண்டாமை ஒழிப்பா? தீண்டாமைக்கு இப்படி ஒரு தீர்வா? என்று வியக்கின்ற உலகை நோக்கி, "இதில் மட்டுமல்ல! எனக்குள்ளும் தீண்டாமைக்குத் தீர்வுகளை வைத்திருக்கின்றேன்' என்று கூறி திருக்குர்ஆன் அழைக்கிறது.

திருக்குர்ஆன் கூறும் அந்தத் தீர்வுகளில் கொஞ்சத்தை இந்த ஏகத்துவ இதழ் தொட்டுப் பார்த்திருக்கின்றது.



இந்த இதழ் ஹஜ் எனும் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டின் சிறப்பிதழாக, தீண்டாமை ஒழிப்பு இதழாக மலர்ந்திருக்கின்றது.       இன்ஷா அல்லாஹ்

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்

 

ஹஜ்ஜின் சிறப்புகள்

அமல்களில் சிறந்தது
செயல்களில் சிறந்தது எது? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

பெண்களின் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

அன்று பிறந்த பாலகர்

உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521

சுவனமே பரிசு

ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773

தவிடுபொடியாகும் தவறுகள்

அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா

சிறப்பு விருந்தினர்

அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884
இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092

ரமளானில் ஒரு ஹஜ்

உம்மு ஸினான் என்றழைக்கப்படும் அன்சாரிப் பெண்ணை நோக்கி, “நீ என்னுடன் ஹஜ் செய்வதற்குத் தடையாக அமைந்தது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், எங்களிடம் தண்ணீர் கொண்டு வருவதற்கான இரண்டே இரண்டு ஒட்டகங்கள் தான் உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் சென்றுள்ளனர். நாங்கள் (இங்கே தண்ணீர் எடுத்துச்) செல்வதற்காக இன்னோர் ஒட்டகத்தை இங்கே எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர்” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் வந்ததும் நீ உம்ரா செய்! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2201

அரஃபா நாள் – மலக்குகளிடம் அல்லாஹ் பெருமிதம்

பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 7702

ஒன்பதாம் நாள் விடுதலை நாள்

அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2402

அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி), நூல்:திர்மிதி3509

அரஃபா நோன்பு (ஹாஜி அல்லாதோருக்கு)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

சிறியவரின் ஜிஹாத் – ஹஜ்

முதியவர், சிறியவர், பலவீனமானரின் ஜிஹாத் ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ 2579

தல்பியாவின் சிறப்பு

எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758

தவாஃபின் சிறப்பு

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947

சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

ஜம்ஜமின் சிறப்பு

அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் தொழுவதை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மத் 14167, இப்னுமாஜா 1396

மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதன் சிறப்பு

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட

எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுல் குபாவில் தொழுவதன் சிறப்பு

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரலி), நூல்: இப்னுமாஜா 1406, நஸயீ692


இன்ஷா அல்லாஹ்

\இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்





ஜும்ஆ தொழுகை


வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல்

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)


பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்


ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 342, திர்மிதி 198

ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்

இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக, "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்'' (அல்குர்ஆன் 6:160) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.

ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான் பார்ஸி (ரலி),நூல் : புகாரி 883

முஸ்லிமில் அபூஸயீத் (ரலி) அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் "பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், "நல்லாடை அணிதல்' என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூல் : நஸயீ 1381

ஜும்ஆ தொழாவிட்டால் ஏற்படும் விளைவுகள்

இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.

ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 881

இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?

பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள்

ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை - அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1416

நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், "வாய் மூடு' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி 934

யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1419

மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்'' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),நூல் : அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.

ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163-166)

இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.

இதயங்கள் இறுகி விடும்

ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1432

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபுல் ஜஃது (ரலி),நூல் : திர்மிதி 460

இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்

ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் 1043

இறைத் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!

இன்ஷா அல்லாஹ்

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்