தமிழ் நாட்டை சார்ந்த சகோதரருக்கு இருதய அறுவை சிகிச்சை !

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சகோ.தாகிர் அலி 
சில தினங்களுக்கு முன்பு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து வீடு திரும்பிய அன்பர் சகோதரர் தாகிர் அலி மருத்துவ பரிசோதனையின் பிறகு இருதயத்தில் அடைப்பு உள்ளதாக தெரிவிக்க மூன்று மாத காலமாக மருந்துகளை உட்கொண்டிருந்தார் .அண்மையில் மீண்டும் சோதனை செய்துப்பார்த்ததில் இருதைய அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர் பரிந்துரையினால் சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் குவைத்தில் இரத்தம் பற்றாக் குறையின் காரணத்தினால் நான்கு யூனிட் இரத்தத்தை அவரிடம் கோரவே ....!

கூனிமேடுவில் உருவாகிருக்கும் புதிய அமைப்பு !


கூனிமேடு இசுலாமிய சமுதாயத்தில் மற்றும் சமூக சேவை நன்னோக்கில் செயல்பட உருவாகிருக்கும் அமைப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு அமைப்பை உருவாக்கி இருப்பது வியப்பாக உள்ளது .

மேலும் அந்த அமைப்பிற்கு K.I.Y.A - KOONIMEDU ISLAMIC YOUTH ASSOCIATIONS (கூனிமேடு இஸ்லாமிய இளைஞர்கள் பேரவை  )பெயர் சூட்டி உள்ளனர் இந்த அமைப்பு விரைவில் நிர்வாகப் பட்டியலை வெளிப்படுத்தப்படும் .சில அமைப்புகள் சிலருக்கென்றே செயல்படுவதால் பலருக்கும் உதவும் நோக்கத்துடன் பொதுவாக  செயல்பட ஊரார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கொண்ட பேரவையாக செயல்படும்  .மேலும் இந்த அமைப்பு ஊருடைய வளர்ச்சியிலும் .முன்னேற்றத்திற்காக பெருதுவக்க பாடுபடும் இதற்காக புலம்பெயர்ந்த சகோதரர்களை நிர்வாகத்தில் இணைத்து ஊருக்கு தேவையானவற்றில் தங்களை ஈடுபடவும் ,ஈடுபடுத்திடவும் முயற்சிகளை கையாளும் .

இந்த அதிகாரப் பூர்வமான தகவலை சில தினங்களுக்கு முன்பாக கூனிமேடு இணைய தளத்திற்கு வந்துள்ளது .

தங்களுடைய கருத்துக்களை கூநிமேடுகுரல் மின் அஞ்சலிலும் ,முக நூலிலும் பதிவு செய்யலாம் .

கூனிமேடு குரலின் ஆதரவு எவருக்கு ?

எதைப்பற்றி எழுதினாலும் எதிரானவருக்கு சாதகமாகவும் தங்களுக்கு பாதகமாகவும் செய்தி உள்ளதாக கருதும் சிலப்பேருக்கு இந்த தொகுப்பின் வாயிலாக சொல்லிக்கொள்ள விருப்பத்துடன்தான் இக்கட்டுரையுடன் முணை ந்திருக்கிறேன் .நான் இந்த இணையம் நடத்துவது ஒரு சேவை நோக்கமே எவரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ ?பதவியை ஆசைப்பட்டோ ,புகழுக்கோ,பெயருக்கோ நோக்கமின்றி பொதுப்படையாக நேர்மையாக உண்மையாக மக்களின் கருத்தும் அவர்களின் நோக்கமும் எவ்வித பாரபட்சமின்றி எந்த அமைப்புக்கும் ஆதரவாக செயல்படாமல் உண்மைக்காக பாடுபட்டு வருகிறேன் .ஊன்று ஒன்றுபட வேண்டும் மக்களின் நிலை உணர்த்த வேண்டும் என்பதற்காக !

KEWA - வின் பித்ரா வசூல் திட்டமிட்டப்படி பொருளாக வழங்கப்பட்டது .

அண்மையில் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தினரால் ஒதுக்கப்பட்ட நால்வரின் முயற்சியால் ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டு அந்த அமைப்பினால் பெருந்தொகையை சேகரிக்கப்பட்டு கூனிமேடு மக்களும் ,அதன் உட்பட்ட இசுலாமிய பகுதிக்கு பொருள் வழங்கப்பட வேண்டும் முன்பே கோரிக்கை வைத்தாலும் அதனை நிராகரிக்கப்பட்டப்போது நேரடியாக களத்தில் இறங்கி பொருளாக விநியோகிக்க முடிவு செய்தது அதன் படியே அதனை வழங்கியும் சாதனைப்படைத்தது .

அவர்கள் வழங்கிய பகுதி வாரியப் ஏழ்மை குடும்பங்களின்  பொருட்கள் வழங்கியப்பட்டியல் !

  • கூனிமேடுப்பகுதியில் மொத்தம் 120 குடும்பத்திற்கும் 
  • செட்டிக்குப்பம் பகுதியில் 65 குடும்பத்திற்கும் 
  • ரங்கநாதப்புரம் பகுதியில் 5 குடும்பத்திற்கும் 
  • வேடப்பாக்கம் பகுதியில் 75 குடும்பத்திற்கும் 
  • செய்யான்குப்பம் பகுதியில் 35 குடம்பத்திற்கும் 
மொத்தம் 300 குடும்பங்களுக்கு பொருளாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் இதனை தகுதியின் அடிப்படையிலே வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

கூனிமேடு தவுஹித் ஜமாத்தின் பித்ரா பணம் பொருளாக வழங்கப்பட்டது .

குவைத்தில் கூனிமேடுவை சார்ந்த  முப்பெரும் அமைப்புகள் பித்ரா வசூலில் ஈடுப்பட்டது ,தாய் ஜமாத்தாக கருதும் கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் பணம் வழங்க திட்டமிட்டதால் மார்க்கத்தில் எதிரானதாகவும் முரணானதாக உள்ளதாக கூறி தங்கள் செயல்பாடுகளை பித்ரா வசூலில் ஈடுப்பட்டது .பித்ரா வசூல் செய்தும் சாதித்தது .

 ஒருப்பகுதியாக கூனிமேடுவிற்கும் அதனை உட்பட்ட கிராம ஏழைகளுக்கு பித்ரா பொருள் வழங்கும் பணி மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கி வழங்கப்பட்டு வெற்றிக் கண்டது .

பொருள் விநியோகம் செய்ததில் கூனிமேடு உட்பட்ட பகுதியில் ஏழைகளுக்கு என்பது பைகளும் ,ரங்கநாதப்புரம் பகுதியில் ஐந்து பைகளும் நெஷலில் இருபது பைகளும் வழங்கப்பட்டது  அதில் அரசி ,சக்கரை ,பால்,போன்ற ஒரு நாளுக்கு சமையலுக்கு தேவையான முக்கிய வாய்ந்த அத்தியவாசியப் பொருள் இணைத்து தந்ததாக கூனிமேடு மக்கள் குரல் செய்திகள் வெளியாகி உள்ளது .
வருடா வருடம் பொருள் வழங்கி முன்மாதரியாக தவுஹித் ஜமாஅத் திகழ்கிறது ..

முக்கோண மருதாணியால் விபரீதமா ?வெறும் வதந்தியே ...!

கூனிமேட்டில் இருந்து  குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த தகவல் தமிழக மாநில முழுவதும் ஓரேப்பரவளாக பேசப்படுவதாகவும் இதனால் அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதாகவும் பகுதிவாரியாக பள்ளி வாயில்களில் இதை குறித்து பேசப்பட்டதாகவும் எவரும் மருதாணி உபயோகிக்க வேண்டாம் கூறவே ....!


நாளை   புனித பெருநாளை கொண்டாட ஆயுத்தமான மக்கள் மத்தியில் இந்த மருதாணி விஷயம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகத்தோடு கரத்தில் மருதாநியிட்டு மகிழ்ந்த மக்கள் மத்தியில் உடனடியாக கைகளை சுத்தப்படுத்தி பதற்றத்தோடு ஏதாவது ஆகிவிடுமோ என்கின்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியது இதனால் குவைத்தில் இருந்தே இது எந்த அளவுக்கு உண்மை என ஆராயந்தப்போது பல்வேறு மாவட்டம் வாரியாக முகநூல் நண்பர்களையும் ஊர் நண்பர்களையும் தொடர்புக்கொண்டு விசாரித்ததில் அந்நிய சக்தியினரால் இட்டுவிடப்பட்டதும் வெளியாகி இருக்கிறது மேலும் மற்றொரு தகவலில் சிறுக் குழந்தை மருதாணிப் பூசிவிடும் படி அடம்பிடிக்கவே ...!

மருதாணி பூசியவர்கள் மரணித்துவிட்டதாக கூறவே இது சிறுக சிறுக பரவி மாநிலம் முழுவதும் இந்த செய்தி பற்றிக்கொண்டு ஸ்தம்பிக்க வைத்தது .ஆகவே தமிழகத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் இது ஓர் வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது .ஆகவே எந்த வதந்தியும் எளிதில் நம்ப விட வேண்டாம் இருப்பினும் விவேகமாக இருப்பதும் அவசியம் .
நலமுடனும் வளமுடனும் பெருநாளை கொண்டாட வாழ்த்துகளுடன் கூனிமேடுகுரல் இணையம் . 


கூனிமேடு குவைத் வாழ் அமைப்புகளின் இனிய ரமதான் தின வாழ்த்துக்கள் !


குவைத்தில் வாழ்ந்துக்கொண்டு வசிக்கும் கூனிமேடு மக்கள் அமைப்புகள் ரமதான் வாழ்த்தினை நல்குவதாக அறிவித்துள்ளது .அவர்கள் தெரிவித்திருப்பது  தங்களுடைய உறவினருக்கும் அன்பர்களுக்கும் ஊர் மக்களுக்கும் மற்றும் குவைத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கூனிமேடு மக்களுக்கும் ...மேலும் இசுலாமிய தோழம ,தோழைமைகளுக்கும் இந்த இனிய ரமதான் பெருநாள் வாழ்த்துக்களை இன்முகத்தோடு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள் .

  • KEWA - KOONIMEDU EXPATS WELFARE ASSOCIATION
  • KOONIMEDU MUSLIM JAMAATH KUWAITH
  • AL NAAS HELP LINE OF INDIA 
  • KOONIMEDUKURAL WEBSITES
  • KOONIMEDIANS KUWAITH, KOONIMEDU,SINGAPORE,MALAYSIA

சென்றுவிட்டதை நினைத்து மகிழ்கிறோம் ..!நம்மைவிட்டு செல்கிறதே நினைத்து கலங்கிக் கொண்டே ..இப்பதிவு .!

குவைத்தில் இனிதே நிறைவேறியது ரமதான் நாளை இந்தியாவில் ,!

சென்றுவிட்டதை நினைத்து மகிழ்கிறோம் ..!நம்மைவிட்டு செல்கிறதே நினைத்து கலங்கிக் கொண்டே ..இப்பதிவு .!


கடந்த முப்பது நாட்களாக நோன்பு நோற்று முதல் பத்தில் ரஹமத் இறைவனின்  அருளும் ,இரண்டாம் பத்தில் மக்பிரத்  இறைவனால் பாவமன்னிப்புதேடுதலும் ,மூன்றாம் பத்தில் இதிகுமுல் நார் -நரக நெருப்பிலிருந்து விடுதலைப்பெருதல் இம்மூன்றும் மனிதனுக்கு இயல்பாக அரிதாக கிடைத்து விடாது !இது அத்தனையும் ரமதான் முப்பது நாட்களில் பல்லாண்டு வருடத்தின் நன்மைகள் ஒரேயடியாக வந்தடைகிறது .


நாம் என்னத்தான் மற்ற பிற தினங்களில் மண்டியிட்டு தொழுது வணங்கி பிரார்த்தித்தாலும் அவ்வளவாக நன்மை எளிதாக கிடைத்து விடுவதில்லை நமக்கு வந்த முப்பது நோன்பும் முத்துக்களாகும் ,இந்த நோன்பை  அடைய வேண்டி நமக்கு கிடைத்த நன்மையை சேமிக்கும்  சொத்துக்களாகும் ஒவ்வொரு ஆண்டும் இறைவனை வணங்கி தொழுது இதனை சேமித்து வைத்தால் மறுமையிலே சொர்க்கத்தையடைய திறவுகோலாகும் !

இன்றுப் பலர் எப்போடா இந்த ரமதான் சென்றடையுமோ நினைக்கிறோம் ஆனால் அதை சரியாக உணர்ந்து உண்மை எதுவென அறிந்து அதுப்படி நடக்க ஆரம்பித்தால் நம்மை விட்டு ஏனோ சென்றடைந்து விட்டது நினைக்கத்தோன்றும்  .அந்த நாட்களை தொலைத்துவிட்டோமே சிந்திக்கத்தோன்றும்.

இன்று பெரும்பாலும் நோன்பு  மற்றவர் கடைப்பிடிக்கிறாரே,,,நாள் முழுதும் பட்டநியாக இருக்கிறாரே  கண்டு அந்த ஆர்வத்தில் நாமும் பின்தொடர்கிறோம். ஆனால் நாம் பெரும்பாலும் இறைவனை உள் அச்சத்தோடு பிரார்த்திப்பதில்லை ,வணங்குவதில்லை !மாறாக அன்றைய நாட்களில்தான் நோன்பு வைத்துவிட்டு நாள் முழுக்க உறங்கிவிடுகிறோம் ,தொழுவதில்லை  ,துதிப்பதில்லை !  

தேவையற்ற விசயங்களுக்கு  பொய் சொல்கிறோம் பிறரை ஏமாற்றுகிறோம் ,வீண் பிரச்சனைகள் செய்துக் கொள்கிறோம் தொலைக் காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் கண்டு கழித்துக் கொண்டு காலத்தை வீணடித்துக் கொள்கிறோம் .இத்தகைய செயல்கள் எத்தனை நாட்களுக்கு தொடரும் பிறரை ஏமாற்றலாம் தங்களை கவனித்து வரும் இறைவனை ஏமாற்றமுடியாது இறுதியில் தாங்கள் ஏமாற்றமடையப்பட்டு நரக நெருப்பில் அடையும்போது தங்களை மீட்க எந்த உறவு பந்தகளும் துணை வராது தாங்கள் செய்த நன்மை மட்டுமே அதனை மீட்க செய்யும் .

ஆகவே வரும் ஆண்டுகளில் இந்த ரமதானை நன் நோக்கத்துடனும் ,இறைவனின் அருளிற்காகவும்.பாவ மன்னிப்பை தேடியும் ,நரக நெருப்பை தவிர்க்கும் விதமாக நோன்பினை நாம் அனைவரும் நோற்று இறைவன் கருணை விழ பிரார்த்திப்போம் ! நாம் அனைவருக்காக பிரார்த்திக்கும் தங்களில் ஒருவனாக !- கவிஞர் முபாரக் . 


கூனிமேடு மக்களுக்கு இந்த ரமதான் அர்ப்பணம் !

அஸ்ஸலாமு அலைக்கும் !
அன்பு சகோதர ,சகோதரிகளே ...!
நம்முடைய குவைத்தில் வாழும் கூனிமேடு சகோதரர்களின் ஒத்துழைப்பாலும் அவர்களின் அரவணைப்பினாலும் இறைவனின் நாட்டத்தினாலும் இனிதே நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எங்களுடைய ஜமாஅத் வரும் காலங்களில் மென்மேலும் இன்னமும் மிகவும் சிறப்பாக செயல்படவும் இளைய தலைமுறையினரைக்கொண்டு வலுவாக உயர்ந்தடவும் ஊருக்கும் ,நம்முடைய மக்களுக்கும் ,பலனளிக்கும் விதத்திலே செயல்பட இருப்பதை இதன் வாயிலாக ரமதான் நல்வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்து மகிழ்கிறோம் .

கூனிமேடு குரலின் ரமதான் வாழ்த்து !

அஸ்ஸலாமு அலைக்கும் !- கவிஞர் இ .முபாரக் சார்பாகவும்
கூனிமேடு குரல் இணையம் சார்பாகவும் நெஞ்சார்ந்த பெரு நாள்  வாழ்த்துக்கள் .!
குழுமிவணங்கி துதித்திட்டுவேண்டிடவே வந்துதிர்த்த
மறைவழிக்கடந்து இறைவழிப் பணிந்திடவே கட்டளையாய்...

கடமைதனை மாந்தருக்கு தந்திட்ட .....இறைவன் கருணை 
யருள்பெற்றிடவே மாதங்களி லொருமாதம் நண்மைக ளடைந்திடவே 

அருளும் ,பாவமன்னிப்பு தேடிட்டு நரகநெருப்பை ....
மீட்டெடுத்து தர்மம் வழங்கி மகிழ்ந்திட்டு 

ஏழ்மையின் வறுமையை மீட்டெடுத்து அகத்தினால் 
இன்புற செய்திட்டு பசிக்கு புசிக்க செய்திட்டு 

சகோதரத்துவம் பேணிட்டு சமத்துவத்தை வளர போதித்து 
வளம்பெறவே நலமறியே....வாழ்க்கையில் செழிய ...
தொழுதே அழுதே பிரார்த்திப்போம் சொர்க்கத்தையடைய யோசிப்போம் !

""அருளாக வந்திறங்கியது  கடமை''
அமைதியாக சென்றடைந்தது இனிமை !

"செல்வந்தனுக்கும் அறியவைத்தது பசியின்உண்மை 
எளியோனுக்கும் சிறக்க  வைத்தது தர்மத்தின் நன்மை "! !

"இனிய நோன்பாக ...வந்து 
இனிய ரமதான் பெருநாளாக .
தந்த இறைவன் ஒருவனுக்கே ....
புகழனைத்தும் !-
------------------------------------------------------
மண்ணில் பலக் கோடி உண்டொன்றி ணைந்திடவே 
பெருநாள் வாழ்த்துகளுடன் !

கவிஞர் இ .முபாரக் .(கூனிமேடு குரல் இணையம்).

KEWA - விடத்திலிருந்து மடல் !

கடந்த வியாழன் அன்று இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக அமைப்பினை அமைத்துக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக கூனிமேடு குரலுக்கு அனுப்பி வைத்தனர் அதில் கூறப்பட்டிருப்பது தங்களின் அமைப்பு நம்முடைய ஊரைசார்ந்த உட்பட்ட பகுதிக்காக சேவை நோக்கத்துடன் துவக்கப்பட்ட அமைப்பாகும் .

கல்வி ,ஊராக வளர்ச்சி ,மருத்துவம் ,திருமணம் ,மற்றும் இசுலாத்தின் அடிப்படை விஷயத்தை மக்களுக்கு எத்தி வைக்கிற நோக்கத்துடன் திறக்கப்பட்டது எவருடைய தனி நபர் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் திறக்கப்பட்டதல்ல !

மேலும் இந்த அமைப்பு இசுலாம் சட்டத்திற்கும் ,இறைவனின் கட்டளையும் ,நபிகள் நாயகம் {ஸல் }அவர்களின் செயல்முறையும் மையமாக கருதி வழி நடத்திட முடிவை தீட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ளது .மேலும் எந்த ஜமாத்தாக இருந்தாலும் இசுலாம் சட்டத்திற்கு முரணாக செயல்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளவும் தயங்க மாட்டோம் என்பதாகவும் உறுதியாக தகவலாக இம்மடலில் தெரிவித்தனர் .

மேலும் ஜமாத்தில் உள்ளவர்கள் இசுலாம் சட்டத்திற்கு உகந்து  நடப்பது அவசியம் என்பதாகவும் அந்த சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு அவர்களுக்கு இசுலாம் சட்டத்தை அறிய வைக்க இந்த பேரவை களத்தில் இறங்கும் என்பதாகவும் கருத்து பதிய வைத்துள்ளனர் .

கூனிமேடு ஜாமியா பள்ளிவாசலுக்கு தேவையான அத்துனை தேவைகளையும்  இயன்ற அளவுக்கு உதவி செய்திட இருப்பதாகவும் .அதுவும் முறைப்படி தபால்படி தகவலை அளித்தால் நிர்வாகம் கூடி மேற்பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .மேலும் தாயகத்தில் உள்ளவர்கள் இந்த பேரவையில் இணைந்து செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர் .

நாங்கள் எதிரியா....! எதிராக செயல்படுகிறோமா? KEWA வின் பதில்கள் !

அண்மையில் திடீரென்று அமைப்பை அமைத்தவர்களாகவும் ,சமீப காலமாக சேவைப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் களத்திலிருந்த இந்த அமைப்பினுடைய முக்கிய நிர்வாக சகோதரர்கள் சிறிய கருத்து வேறுபாடின்பால் இன்னொரு அமைப்பிளிருந்து நீக்கப்பட்டது .ஆகவே அவர்கள் தாங்கள் செய்துக்கொண்டிருந்த பணிகளை கைவிடாது தொடர்ந்து செய்தவாறு இருந்தனர் .அப்படி இருக்கும் பட்சத்தில் ஒதுக்கப்பட்ட அந்த சகோதரர்கள் அமைப்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றசாற்றுக்கள் கிளம்பின ..!

இப்படியே நால்வரோடு தொடர்ந்த இந்த அமைப்பு  இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து மக்கள் சேவைப்பனியில் முழு ஈடுபாட்டுடன் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள் அப்படி இருக்கையில் அண்மையில் மக்களால் மீண்டும் இவர்கள்மீது குற்ற சாற்று எழும்பிடவே கூனிமேடுகுரல் இணையம் அவர்களுக்கு எதிராக ஒரு செய்தியை இந்த இணையத்தில் பதிவு செய்திருந்தது அதில் குறிப்பிட்டிருந்தாவது இஸ்லாம் சட்டத்திற்கு முரணாக அமைப்பு நடத்துவதாகவும் தலையும் இல்லை வாலும் இல்லை குறிப்பிட்டிருந்தது அதற்கு முக்கிய காரணம் அப்போது அந்த அமைப்பு நால்வரோடு தனிமையாக களத்தில்போராடிக்கொண்டிருந்தது .

அதை உணர வைக்கும் நோக்கத்துடனும் அமைப்பு என்பது இஸ்லாத்தில் சேவைப் பங்கில் தலைமையை அமைத்து நிர்வாகப்  பொறுப்பை கொண்டு செல்வது அவசியமே , நால்வரோடு நால்வரும் தலைவர்கள் நிர்வாகிகள் கூறிக்கொண்டிருந்தால் நேர்மையற்றதாகும் அது மற்ற அமைப்புக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டியது .

செய்தி வெளியிட்டு சில நாட்களிலேயே அந்த அமைப்பு இப்தார் நிகழ்ச்சியோடு நிர்வாக தேர்வு நிகழ்சியை இணைத்து ஏற்பாடு செய்து தக்க மரியாதையுடன் கூனிமேடு குரலை வரவேற்பளித்தது .அந்த கூட்டத்தில் கூனிமேடு குரல் அந்த அமைப்புக்கு சேவை நோக்கத்தோடு மட்டும் செயல்பட வேண்டும் எனவும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்திற்கு எதிராக செயல்படக்கூடாது கருத்து பதிவு செய்வதற்கு முன்பு அவர்கள் எதிராக நடக்கவில்லை கூறி கருத்தினை பதிவு செய்தனர் .

இருந்தாலும் அப்போது இணையம் ஒன்றுக்கூடி ஊரை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் கேட்டுக்கொண்டதுடன் அந்த ஜமாத்திற்கு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் கேட்டுக்கொண்டது .அதே சமயம் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தாவது மூத்த ஜமாஅத்தினருக்கு  நாங்கள் எதிராக எக்காரியமும் செய்வதில்லை கூறவே பித்ரா வசூலைப்பற்றி கருத்தினை பதிய வைக்கும் போது அவர்கள் தெரிவித்தது நாங்கள் அந்த ஜமாத்தில் இருக்கின்றப்போது அதன் பின்பும் பித்ரா  வசூலை பணமாக தரக்கூடாது பொருளாகவே தர வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தோம் ,அந்த கோரிக்கை கெடுப்பில் போட்டிருப்பதுதான் எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை மார்க்கம் சட்டத்திற்கும் மக்களின் நிலைக் கருதி பொருள் தந்திருந்தால் அவர்களுக்கு எதிராக செயல்பட அவசியமில்லை தெரிவித்தனர் .

அதன் பிறகு வட்டியில்லா கடன் திட்டத்தை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகாலமாக செயல்படுத்திட எதிர்கால செயல் திட்டத்தில்முடிவு  எட்டபட்டிருந்தும்  அதை நிராகரித்ததால் அதை  நாங்கள் பொறுப்பேற்று செய்ய வேண்டியாதாக அமைந்து விட்டது தற்போது அந்த திட்டத்தால் மூன்று நபர்கள்  பயன் பெற்றுள்ளனர் .தற்போது எதிராக செயல்படுகிறார்கள் சொல்வது நியாயமற்ற கருத்தாகும் .

மூத்த ஜமாஅத் கூறிக்கொள்ளும் இவர்கள் நாங்கள் செய்வதற்கு முன்பாக இந்த காரியங்கள் நிறைவேற்றிருந்தால் நாங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை அவர்கள் செய்யவில்லை என்பதால்  நாங்கள் முழு வீச்சுடன் செயல்படுகிறப்போது எதிராக செயல்படுகிறார்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது கூறுவதுடன் அவர்களுக்கு நாங்கள் ஒத்துப் போகவே நினைக்கிறோம் மாறாக அவர்கள்தான் எங்களுக்கு பகையாளியாக நினைக்கிறார்கள் .

அண்மையில் அதாவது சென்ற ஆண்டு ஜமாஅத் பிளவுப்பட்டப்போது பித்ரா வசூல் செய்து அவர்களிடம் ஒப்படைத்தோம் ஒரே ஒருக் கோரிக்கை வைத்தோம் பணமாக இல்லை பொருளாக தரவேண்டும் என்பதற்காக பணத்தையும் ஒப்படைத்தோம் பணம் பெற்றுக்கொண்டு ஊரிலே பொருள் தராமல் பணமாக தந்துள்ளனர் .ஆகவே நாங்கள் இவர்களுக்கு போட்டிபோடுகிறோமா இல்லை அவர்கள் எங்களிடம் போட்டிபோடுகிறா ர்களா?

மேலும் அதன் பிறகு பித்ரா வசூல் செய்தவர்களை ஜமாத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நீக்கியுள்ளனர் அச்சமயம் சிலர் தாயகத்திலிருந்ததால் அவர்கள் இல்லாதப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர் .அவர்களிடத்தில் என்ன தவறு இருந்தது ?செய்த தவறுக்கு விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் முரணான கருத்திருந்தால் அவர்களை நீக்கி இருக்கலாம் ஆனால் இவர்களோ உடனடியாக நீக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயமானது ?

 நாங்கள் அவர்களிடம் பணத்தை    பொருளாக தர வேண்டும் கோரிய பட்சத்தில் ஆனால் பொருளாக தருகிறேன்   கூறி  பணமாக தந்ததால் இந்த பித்ராவுக்குபொறுப் பெடுத்து உள்ளோம் .இந்த முறை இவர்களிடத்தில் பணம் தந்து ஏமாறமாட்டோம் இவ்வாறு கூறினார்.-இந்த தொகுப்பு இப்தார் நிகழ்ச்சியின் போது கலந்துரையாடல் நடத்தியதை அக்கருத்தை பதிவு செய்துள்ளேன் .இங்கனம் கூனிமேடு குரல் .

கூனிமேடு அருகே கடந்த ஞாயிறன்று அதிகாலை நடைப்பெற்ற விபத்து !


கூனிமேடிற்கும் அனுமந்தைக்கும் இடைப்பட்ட இடைவேளியில் நடைப்பெற்ற விபத்தில் ஐந்து நபர் சம்பவ இடத்திலையே பலியாகினர் மேலும் இருபத்தி ஆறு நபர்கள் புதுவை காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .புதுவையிலிருந்து சென்னையை நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து ,மரக்காணத்திலிருந்து புதுவையை நோக்கி சென்ற லாரி சம்பவத்தன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது .இந்த சம்பவம் அதிகாலை ஐந்து மணிக்கு 12-08-2012 அன்று நடந்ததால் மீட்பு பணி தோய்வுப்பாட்டாலும் மரக்காணம் காவல் துறை விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையை ஈடு பட்டதுடன் விபத்தில் சிக்கியவர்களையும் ,உயிர் இழந்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அன்றைக்கு மேலும் ஒரு விபத்து !
கூனிமேடு ரங்கநாதபுரம் அருகில் நடந்த மற்றொரு விபத்தில் ரங்கநாதபுரத்தை சார்ந்த ஒருவரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது .அவருக்கு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் ,இது வரை எவ்வித மாற்றமின்றி கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

விபத்தில் சிக்கியவர் தலைவர் ஏழுமலை அவர்களின் மைத்துனர் என்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

குவைத் இந்திய தவுஹித் ஜமாஅத் நடத்தும் இப்த்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு .


 குவைத்தில் அனைத்து அமைப்புகளிலும் மத சார்பற்று இணக்கத்தோடு பழகிவரும் INTJ அமைப்பின்  செயல்பாடுகள் குறித்து வியக்கத்தக்க விதத்தில் உள்ளது .அதேப்போல மாற்று மத சஅமைப்பினர்களை அரவணைத்து  ஒன்றிணைத்து ஒற்றுமையைபோதித்து சமத்துவத்தை கற்பிக்கும் பாங்கும் போற்றுதலுக்குரியதாக உள்ளது .

மதத்தின் நெறியையும் ,இஸ்லாத்தின் வழியையும் பிறருக்கு எடுத்துச் சொல்லும் விதம் வர வேர்க வேண்டிய விதத்தில் உள்ளாதால் அனைத்து அமைப்புகளும் விரும்பி ஒன்றினையும் கூடலாக வழி வகுத்து செல்கிறது இந்த அமைப்பு .அதன் வழியே பல்வேறு நிகழ்வுகளை பாலை மண்ணில் தொகுத்து வழங்கி இஸ்லாத்தின் மகத்துவத்தை விளக்கினாலும் ...அதே நோக்கத்தோடு வர இருக்கின்ற வெள்ளியன்று இப்தார் நிகழ்சிகளை தர திட்டமிட்டு குவைத் வாழ் இந்திய அமைப்புகளுக்கு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைப்பு  விடுத்துள்ளது .

இந்த நிகழ்ச்சி குவைத் திருச்சி உணவகத்தில் மாலை 5மணிக்கு துவங்க உள்ளது .வரவேற்புரை வழங்க சகோ.கூனிமேடு சாதிக் அவர்களும் தலைமை பொறுப்பேற்று முகவை அப்பாஸ் வழி நடத்திட சிறப்போரையாற்ற உள்ளார் மவுலான மவுலவி .அப்துல் காதிர் மன்பஈ ,அவர் பேச இருக்கும் தலைப்பு மனிதனுக்கேற்ற மார்க்கம் இசுலாமாகும் .சாதிக் சதாம் இறுதியாக முடியுரை வழங்க நிகழ்ச்சி நிறைவேறும் .இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள அனைத்து தரப்பு அமைப்புகளையும் வரவேற்றிட இன்முகத்தோடு  காத்துக்கொண்டிருப்பதாக தகவலை தெரிவித்துள்ளனர் .

தங்கள் ஆலோசனையை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்- குவைத் மண்டலம்.

தொடர்புக்கு; 65653431 ,97659759 ,99324815 ,97145046

KEWA - அமைப்பின் முதலாவது நிர்வாகக் குழு கூடல் !


கடந்த வியாழனன்று மாலை இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாகத்தை அமைத்துக்கொண்ட இந்த அமைப்பு நிர்வாகப்பட்டியலை வழங்கவில்லை இதனை தொடர்புக்கொண்டு பேசியதற்கு அந்த அமைப்பின் நிர்வாகத்தலைவர் சகோ .அமானுல்லாஹ் அவர்கள் ஏற்கனவே நாங்கள் தனிமையாகிருந்தோம் தற்போது தாங்கள் கேட்கும் தகவலை நிர்வாகத்தில் கலந்து ஆலோசித்து வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது . அவர்களிடத்தில் ஒன்றுக்கூடி ஆலோசித்து வரை ஓலை வாயிலாக கூனிமேடு குரலுக்கு நிர்வாகப்பட்டியலை வழங்கப்படும் கூறியுள்ளார் .

மேலும் இன்றைய நிகழ்ச்சியை குறித்து பேசுகையில் நிர்வாகம் கூடியப் பிறகே அது வெளியிடப்படும் ஆனால் கூனிமேடு குரலுக்கு ஆதரவளிக்க கூட்டமாகவே இதுவிருக்கும் கூறியுள்ளார்.அதனால் இன்று இஷா தொழுகைக்கு பிறகுகூடும் இந்த கூடலில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் தகவல் வெளி வந்துக்கொண்டிருக்கிறது .

தமிழோசையின் எழுபத்தி ஐந்தாவது மாத விழா மற்றும் இப்தார் சுதந்திர நிகழ்ச்சி !


குவைத் தமிழர்களின் அங்கமாகவும் ,கவிஞர்களின் குடும்பமாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும்  தமிழோசை கவிஞர் குழாம் ஜாதி,மதம்,பேதமின்றி காணாது குவைத்  மக்களுக்கு பல்வேறு நிகழ்சிகளை  வழங்கி வருகின்ற நிலையில் ...அதில் ஒரு நிகழ்வாக கடந்த வெள்ளியன்று இப்தார் நிகழ்சியுடன் ,சுதந்திர தின நிகழ்ச்சியும் ,எழுபத்தைந்தாவது மாதாந்திர கூட்டமும் நடத்தப்பட்டது .

இந்த நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு துவங்கப்பட்டு ஒன்பது மணி வரையில்  நடந்தது .கூட்டத்தை முதன்முதலாக துவக்கி பேசிய மன்றத்தின் தலைவர் பிரான்சிஸ் அவர்கள் ஆலோசகர் கவிஞர் சிவக்குமார் அவர்களை விழா சிறப்பித்து தருமாறு பணித்திட செயலாளலரின் முன்மொழிதலோடு மேடையேறினார் ஆலோசகர் .அதற்கு முன்பு இப்தார் நிகழ்ச்சியை துவக்கத்தை துவக்கிட்ட விட்டுகட்டி மஸ்தான் கவிதைப்பாட கவிஞர் சத்தியன் அவர்களை அழைத்தனர் ,அவரின் ரமதான் மாதத்தைப் பற்றி சிறப்பு கவிதை முழங்க ,,,பின் தொடர்ந்த துணைத் தலைவர் கவிஞர் சம்சுதீன் முடிவுரையோடு வரவேர்ப்புரையும் வழங்கி முடித்திட்டார் குவைத்தின் வள்ளல் பெருமான் சகோ டிவிஎஸ் .அலாவுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இருந்தார் .

இதனை தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியை முடித்து மக்ரிப் தொழுகைக்கு பிறகு துவங்கிய கவிஞர்களின் அங்கமம் சங்கமமாக கவிதைகள் வழங்க ,,,பட்டிமன்றத்தின் சங்கமம் போன்ற அறிய நிகழ்சிகளை முத்தாய்ப்பாய் வழங்கி இவர்கள் குதூகலப்படுத்தினர் .இதைக் காண  பல்வேறு அமைப்புகளில் இருந்து வருகைத்தந்த அமைப்புகளும் கவிஞர் குழாம் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .

K.E.W.A வின் இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக தேர்வு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது .


கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மூத்த ஜமாத்திலிருந்து பிரிந்து அண்மையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இது நாள் வரையில் நான்கு நபர்களோடு நடந்துக் கொண்டிருந்தது.ஆனால் பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்தால் இன்று பொறுப்பாளிகளை நிர்ணயித்து வெளியிட்டது .இதன் விபரம் முழுமையாக விரைவில் அறிவிக்கப்படும் .

மேலும் ,குவைத் ஷர்க் பகுதியில் ஆப்பிள் உணவு விடுதிக்கு எதிராக அமைந்துள்ள பூங்காவில்  5 :30௦ துவங்கப்பட்டு இந்த நிகழ்சி 50 நபர்கள் கொண்ட உறுப்பினரோடு நடந்தது .முதலில் பித்ரா வசூலைப்பற்றி விளக்கங்களும் தனித்து வசூலைப்பற்றி விளக்கமளிக்கப்பட்டது அதன் பிறகு இப்தூர் நிகச்சி துவக்கி மக்ரிப் தொழுகை முடிந்து ஆரம்பம் செய்து ,அமைப்பினுடைய ஆரம்பமும் அதன் நோக்கமும் ,செயல்பாடுகளைப்பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது .

இதன் பிறகு இறுதியாக நிர்வாகிகளை தேர்வு செய்து வெளியிடப்பட்டது . இந்த நிகழ்ச்சி சுமார் ௩ மணி நேரம் வரை நீடித்தது .

தற்போது கட்டிய சுவர் சிலவு !வண்ணம் தீட்டிய வரவிலான சிலவு அதிகாரமான தகவல் .


அண்மையில் வாகனம் மோதி நொறுங்கிய சுவரை வாகன் ஓட்டியிடம் பணம் வசூலிக்காமல் ஏமாற்றம் கண்ட பெருமை நம்முடைய ஊருக்கு கிடைத்தாலும் ,மக்களின் ஆதரவினால் கிடைத்திட்ட தொகையால் சுவர் கட்டி பெருமிதம் கொள்ள முடிகிறது .இன்றைய நாள் வரையில் யார் கட்டுவது எப்படி கட்டியது புரியாத புதிரில் இன்று அது நம்ப தாக்கும் முறையில் அம்பலமாகியது .

அண்மையில் பள்ளி வாசலுக்கு வண்ணம் தீட்ட பணம் வசூலிக்கப்பட்டது அந்த பணம் மீறவே அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள பெருதுவக்க உதவுகிறது .சேமிக்காமல் ஆட்டையை போட்டு !சிறிய ஓட்டியாவது தெரியுமா?காட்டியே விற்றிடலாம் கூற்றைப்போல இல்லாமல் அவர்களுக்கு மாறாக ஊருடைய வளர்சிப்பநிகளில் ஈடுபட்டிருக்கும் தோழமைகளுக்கு இத்தருணத்தில் பாராட்டிடவே கடமைப்பட்டுள்ளேன் .


நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் கூனிமேடு குரல் வேண்டுகோள் .

தற்போதைய சூழ்நிலையில் கூனிமேடு கூறாகி கடுக்கிற  தருணத்தில்   ஊருக்கு நலம் விரும்பி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .இன்றைய கணக்கெடுப்பில் குவைத்தில் மட்டும் தமிழ்நாட்டினுடைய இரண்டாம் ஜமாத்தாக திகழும் கூனிமேடு ஜமாஅத் பிளவுப்பட்டு கிளைகளாக மாறிவருவதை வேதனையளிக்கிறது .ஒவ்வொருவர் மீதும் மற்றொருவர் மாறி மாறி குற்றங்களை பொழிந்த வண்ணமாய் திகழ்வதால் ஊருடைய வளர்ச்சியிலும் ,ஒற்றுமையிலும் பாதிப்பு ஏற்படுகிறது .

கூறாய்ப்போன கிளைகள் தாய் மரம் ஒன்றுள்ளதாக நினைத்தால் வேதனைப்படத்தேவை   இல்லை .நாராக கிழிந்து வேரின்றிப்போவதால் நாதியின்றி தலை எது ?வால்  எது தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை தற்போது நிலவுக்கொண்டிருக்கிறது .இந்த நிலை மாற வேண்டும் கூனிமேடு ,மற்றும் குவைத் வாழ் மக்கள் ஊருடைய வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .இன்று குவைத்தில் செயல்படும் அமைப்புகள் .
  • K.M.J.K{KOONIMEDU MUSLIM JAMAATH KUWAITH }
  • K.E.W.A {KOONIMEDU EXPETRIATE WELFARE ASSOCIATION}
  • K.I.S.K {KOONIMEDU ISLAAMIYA SOCIALSERVICE (AT) KUWAIT
  • AL-NAAS {AL-NAAS HELPLINE OF INDIA}
  • T.N.T.J{TAMIL NADU THWHEETH JAMAATH''KOONIMEDU }
  • I.N.T.J{INDIAN NATION THAWHEET JAMAATH ''KOONIMEDU}
  • K.M.C.M.G{KOONIMEDU MOTOR CITY MICHINE GUN}
  • AL-FAIZ FRIENDS OF KOONIMEDU/KUWAIT
இத்துனை அமைப்புகள் இருந்தாலும் ஊர் கண்ட வளர்சிகள் என்ன ?இத்துனை நாட்களாக பாமரராகவே இருக்கிறோம் ,கல்வியிலும் ,முன்னேற்றத்திலும் பின்தங்கியவாரே இருக்கிறோம் .சாதித்தவர்களாக எவரும் இல்லை !சாதிக்கவும் முயற்சிகளும் மேற்கொள்ள முயன்றதில்லை .பள்ளிவாசலுக்கு வலது ஒருப்பகுதியாகவும் இடது ஒருப்பகுதியாகவும் நாமே நாம் பிரித்துக்கொண்டு செயல்படுவதுதான் வேதனை அளிக்கிறது .காலம் காலமாக தலைவர் மாறுகிறார் ,பள்ளி ஆசிரியர்கள் மாறுகிறார்கள் ,நிலம் வீடாகிறது ,தோப்பு வறண்ட பூமியாகிறது இதுப்போன்ற எத்தனையோ அடக்கிட்டு போனாலும் அடங்காத தொடரும் மாற்றங்கள் இருந்தும் மக்கள் மற்றும் அவர்கள் நிலையிலிருந்து மாறவில்லை .

ஆகவே இதை கருத்தில் கொண்டு ஒரு குடையில் சாய நினைத்தால் கண்டிப்பாக நம்முடைய சமுதாயத்தை வளர்ச்சியடையவும் ,முன்னேற்றத்தை உயர்த்திடவும் முடியும் அதற்காக நாம் முதலில் ஒன்று படவேண்டும் .ஊர் நலனில் அக்கறை சேர்க்க வேண்டும் .

K.E.W.A சமூக சேவை தொண்டு அமைப்பின் இப்தார் நிகழ்ச்சியும் ,நிர்வாகம் அமைக்கும் கூட்டமும் நாளை வியாழக்கிழமை நடைப்பெறுகிறது .


குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை   தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு  இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென  அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும்  கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது . 

சுவர் கட்டும் பணி தீவிரம் !



விபத்தால் இடிந்த சுவர் கட்டும் பணி கூனிமேட்டில் தீவிரமாக நடைப்பெருகிறது .
அண்மையில் குடிப் போதையில் தாறு மாறாக வாகனத்தை ஓட்டி வந்து பள்ளிவாசல் சுவரில் இடித்ததால் பள்ளிவாசல் தடுப்பு சுவர் பலத்த சேதம் ஏற்பட்டது குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவாகக் கூடம் எண்ணப்பட்ட சுவரை முன்னாள் முத்தவல்லி ஜனாப் ,அப்துல் சத்தார் தலைமையில் கட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது . அந்த வேலைப்பாடுகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருவதாகவும் .சுவர் கட்டுவதற்கு எவர் தரப்பில் பணம் பெறப்பட்டது தகவல் வெளியாகவில்லை .

இருப்பினும் உள்நோக்கத்துடன் விரைந்து கட்டப்படுகிறார்கள் கருத்தும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது .இதன் முழுமையான தகவலை சேகரிக்க இன்றைய வாலிபர்கள் போதிய ஒத்துழைப்பு இணையத்திற்கு வழங்காததால் தவழ வழங்க தோய்வு ஏற்படுகிறது .

கூனிமேடு முஸ்லிம் ஜமாத்திற்கு எதிர் குரல் !


நடந்துமுடிந்த பித்ரா வசூலைப்பற்றி ஆலோசனைக்கூட்டத்தில் பிரிந்திருக்கும் அமைப்புகளை இணைக்கும் விதத்தில் எழுப்பப்பட்ட சிலரின் கருத்துக்கு எதிராகவும் பலரின் கருத்துக்கு ஆதரவாகவும் பதில் அளித்தனர் .

இதில் இந்த கருத்தை முன்னிறுத்திய ஆலோசகர் ஜனாப். அப்துல்லாஹ்! அவர்கள் முன்னிறுத்திய கருத்தாவது மற்றொரு பிரிந்த அமைப்பு பித்ரா பணம் வசூல் செய்ய தோழர் இலாஹி அவர்களின் வியாபாரஸ்த்ளத்திற்கு சென்று பித்ரா வசூல் செய்ததாகவும் அதற்கு அவர் ஒன்றிணைந்து செயல்படக்கோரி  கோரிக்கை வைத்ததாகவும் அந்த தகவலை அவர் வாயிலாக ஆலோசகருக்கு அறிவித்திருப்பதாகவும் முன்னிறுத்தியதால் ..!

இப்பிரச்சனையை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தலைவர் அவர்கள் அக்கூட்டம் எல்லா விடயத்திலும் எதிராக நடப்பதாக கூறவே ...சிலக் கருத்துகள் முன்னிறுத்த எதிர் குரலாக இந்த இணையத்தின் குரலை பதிவு செய்தது மேலும் இறுதியாக அதற்கு தீர்வை செய்ய முடிவு செய்யப்பட்டது .கூனிமேடு  வாலிபர்களால் மிகவும் செயல்பாடு மிக்க k.i.s.k மற்றும் அல் - நாஸ்  அமைப்புகள் தங்கள் சுய வேலைகளில் மட்டும் தீவிரமாக செயல்படுவதாகவும் தங்கள் செயல்பாட்டிற்கு இணக்கமாக கைக்கோர்ப்பதாகவும் மாறாக எதுவும் தங்களுக்கு எதிராக செயல்படுவதில்லை செய்வதில்லை தோழமையுடன் உள்ளதாக கருத்து கூறிடவே ஒரு அமைப்புக்கு மட்டும் KEWA ,அந்த அமைப்பில் நிர்வாகிகள் சிலர் இந்த அமைப்பிலிருந்து விலகி இவர்களுக்கு எதிராக எல்லா விசயத்திலும் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டதுடன் .

ஜனாப் அப்துல்லாஹ் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அவர்கள் மறுபடியும் உள்ளே நுழைய முன்வந்தால் நிபந்தனை பேரில் இணைத்துக்கொள்ளலாம் கருத்தினை முன்னிறுத்த சற்று மக்கள் அந்த அமைப்பின் நிர்வாகத்தின் மீது குற்ற சாட்டினை வைத்தாலும் இணையத்தின் எதிர்குரலால் அவர்களை தோழமை மனப்பான்மையோடு மூத்த  ஜமாஅத் என்கின்ற பேரில் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளவே அனைவரின் ஏகோபித்த கருத்தோடு அவர்கள் இணைய நினைத்தால் வருத்தம் கடிதம் கூறி உள்ளே நுழையலாம் கருத்தினை திண்ணமாக வெளியிடப்பட்டது .

கூனிமேடு குரல் அனுப்பிய ஏழை வரி {பித்ரா }குறித்த கருத்துக்கு ஆலோசனை.



அண்மையில் கூனிமேடு குரல் இணையத்தால் கோரிக்கை ஓலையை கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத்திற்கு அனுப்பப்பட்டது .அதில் குறிப்பிட்டிருப்பது இன்றைய சூழ்நிலைக்கு பணம் தருவதை விட பொருளாக தருவதே மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பணமாக தந்தால்  இசுலாமிய சட்டத்திற்கு முரண்பாடாக சென்றடையும் என்கின்ற மைய கருத்தை பதிவு செய்திருந்தது .அதை அந்த நிர்வாகம் செயற்குழு கூட்டத்தில் படித்து ஆலோசனை நடத்தப்பட்டது .

மேலும் ஆலோசனை செய்ததில் தற்போது குறுகிய கால அடிப்படையிலும் .மக்களின் பற்றாக்குறை நிலையாலும் தற்போது வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வர இருக்கும் காலங்களில் மக்களிடம் பரிசீலனை செய்து முறையாக நிறைவேற்றப்படும் என்பதாக கருத்தை முன்னிறுத்தப்பட்டது . இந்த விவாதத்தில் பொருளாகத் தர தோய்வு ஏற்படும் வீண் செலவுகள் நிர்வாகத்திற்கு ஏற்படும் கருத்துகள் முன்னிறுத்தியதால் அந்த செலவினங்களை பெரும் செலவாக ,பாரமாக நினைக்கும் பட்சத்தில் அப்பொறுப்பை கூனிமேடு குரல் இணையம் பொறுப்பேற்கும் தெரிவித்தது .அடுத்த ஆண்டு முடிவு எட்டப்படும் கூறியதால் .இந்த இணையத்தால் வசூல் செய்யப்பட்டு தோழர் சித்திக் பொறுப்பில் 77  குவைத்தி தினாரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

K.M.J.K வின் புதிய செயலாளராக தோழர் சித்திக் நியமனம் .


பித்ரா வசூலைப்பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்பட்டப்பின் செயலாளர் ஜனாப்.லியாகத் {ஹை}அவர்கள் தாயகம் செல்ல இருப்பதால் தற்காலிகமாக அவ்விடத்தில் பூர்த்தி செய்யும் விதமாகவும் ,அமைப்பை சிறப்பாக வழி நடுத்தி கொண்டு செல்வதற்காகவும் ,அரவணைக்கவும் ,ஆறுதல் சொல்லவும் .தகவல் சேகரிக்கவும் தகுந்தவர் என்கின்ற கண்ணோட்டத்தில் மக்களால் முடிவு செய்யப்பட்டது இதற்கு முன்பாக தோழர் பசுலு(அப்துல் லதீப் )அவரை பரிசீலனை  கேட்கப்பட்டு மறுக்கப்பட்டதால் அவ்விடத்திற்கு சகோதரர் சித்திக் அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்யப்பது .

கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் குவைத் தோழமைகளின் செயற்குழுக்கூட்டம் .




K.M.J.K தொழமைகளின் செயற்குழுக்கூட்டம் செவ்வாய் அதிகாலை 12 .30  மணிக்கு ஆரம்பமாகியது .கூட்டத்தை வரவேற்று பேசிய ஜனாப் .அப்துல்லாஹ் அவர்கள் தலைமைப்பொருப்பேற்று கூட்டத்தை வழிநடத்திட தோழர் ஹலீம் லியாகத் (துணைத் தலைவர்)அவர்களை முன்மொழிக்க இனிதே ஆரம்பமாகிய செயற்குழுக்கூட்டம் பித்ரா வசூலைப்பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது .

மேலும் ,பித்ரா வசூல் மொத்தம் 500 தினாரை தாண்டக்கூடும் என்பதாகும் இதுவரை அந்த தொகையை நெருங்கிவிட்டதாகவும்  விளக்கமளித்ததுமின்றி அப்பணத்தை ஆய்வு செய்யப்பட்டு  கணிக்கப்பட்டுள்ள  175 வீடுகளுக்கும் தலா 700 ரூபாய்க்கும் மேலாக தர்மம் செய்ய கருத்தை முன்னிறுத்தியதால் அனைவரும் ஏகமனதோடு ஏற்றுக்கொண்டனர் .

மேலும் சிலர் அருகில் உள்ள நம் அண்டை கிராமத்திற்கு உதவிட கோரிக்கை வைத்தனர் அதை பரிசீலனை செய்த நிர்வாகம் அப்போதே குறிப்பிட்ட வீடிருந்தால் அவர்களுக்கு நிதியை வழங்கிடலாம் .அதை எடுத்து செய்வதற்கு ஆட்களின் பற்றா குறையால் தகுந்த ஏழைகளின் கணக்கீடு தேவைப்படுவதால் மஞ்சக்குப்பத்தை தவிர வேறு கிராமத்தை தர ஒப்புதலை மறுக்கப்பட்டு வர இருக்கும் ஆண்டுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது .

இக்கூட்டத்தில் மொத்தம் 80 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நன்றியுரையை தலைவர் ஜனாப்.பாசுளுல்லாஹ் வழங்க இந்த ஏழை வரி (தர்மம்)வசூல் செய்த நிர்வாகிகளுக்கும் ,தந்த தர இருக்கின்ற ஆதரவுத்தந்த அத்துணை கூனிமேடு மற்றும் அல்லாத ஊர்களுக்கும் "ஜிசக்கல்லாஹ் கைரன்" கூறி பாராட்டி நிறைவு செய்தார் அதற்கு பிறகு உணவு சஹார் தயார் செய்து உபசரிக்கப்பட்டது .அதன் பிறகு கூடம் நிறைவேறி கலைந்தது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்